சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் | 'தி ராஜா சாப்' போட்டியை சமாளிக்குமா 'ஜனநாயகன்' | 'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா |
இன்று (நவ.,18) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நயன்தாராவின் வாழ்க்கை பற்றிய ஆவணப்படம் வெளியாகியுள்ளது. 'நயன்தாரா - பியான்ட் த பேரி டேல்' என்ற அந்த ஆவணப்படத்தில் நயன்தாராவின் வாழ்க்கை, அவர் சந்தித்த கஷ்டங்கள், சினிமா வாழ்க்கை, காதல், திருமணம் என அனைத்தும் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் தனது முந்தைய காதல் பற்றி நயன்தாரா பேசியதாவது: எனது முதல் ரிலேஷன்ஷிப்பை எடுத்துக்கொண்டால், முழுக்க முழுக்க நம்பிக்கை அடிப்படையில் இருந்தது. நம்பிக்கை மட்டும்தான் இருவருக்குமிடையே நல்ல ரிலேஷன்ஷிப்பை வைத்திருக்கும். காதலை தாண்டியும் நம்பிக்கை இருக்க வேண்டும். நம் காதலரும் நம்மை முழுமையாக காதலிக்கிறார் என்பதை நம்ப வேண்டும். 100 சதவீதம் நாமும் காதலிக்க வேண்டும். நான் எப்போதும் அப்படித்தான் இருந்திருக்கிறேன்.
என்னுடைய முந்தைய ரிலேஷன்ஷிப் பற்றி இதுவரை நான் எங்குமே பேசியதில்லை. ஆனால், எல்லோரும் நிறைய விஷயங்களை அவர்களே நினைத்துக்கொள்கிறார்கள். எந்தக் கதையை நம்ப வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதை மட்டுமே அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், அந்தக் கதைகள் எல்லாம் மோசம். என்னுடைய மனதை காயப்படுத்திய விஷயம் என்னவென்றால், என்னைப்பற்றிய கதையை என்ன, ஏது என்றுகூட விசாரிக்காமல் அவர்களாகவே ஒன்றை நினைத்துக்கொண்டதுதான்.
இன்றுவரை எனது ரிலேஷன்ஷிப்பில் சம்பந்தப்பட்ட ஆண்களை ஒருத்தர்கூட கேள்வி கேட்கவில்லை. சம்பந்தப்பட்ட ஆண்களிடம் சென்று, 'நீங்கள் ஏன் இதை செய்தீர்கள், உண்மையில் என்ன நடந்தது?' என்று கேட்டதே இல்லை. எப்போதும் ஒரு பெண்ணை மட்டும்தான் கேள்வி கேட்கிறார்கள். இது நியாயமே இல்லை. என்னைக் கேள்வி கேட்டால் சம்பந்தப்பட்ட மற்றொரு நபரையும் கேள்வி கேட்க வேண்டும்தானே? நான் ஒருத்தி மட்டும் தான் இங்கே ரிலேஷன்ஷிப்பில் இருந்துருக்கிறேனா அல்லது நான் ஒருத்தி மட்டும் காதல் செய்துள்ளேனா. இது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை. இவ்வாறு நயன்தாரா ஆதங்கமாக பேசியுள்ளார்.